96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மகத்தான பேருதவி! சொன்னதை செய்துகாட்டி, உயர்ந்து நிற்கும் நடிகை ஜோதிகா! குவியும் பாராட்டுக்கள்!
நடிகை ஜோதிகா தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருக்க உதவும் வகையில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கிய நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக நடிகை ஜோதிகா தஞ்சாவூர் சென்றிருந்தார். அப்பொழுது அவர் பழமையான அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்ட போது அங்கு பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் தாய் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கூடுதல் வசதிகள் தேவை என்பதை உணர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோதிகா கோவில்களுக்கு செய்யும் செலவினை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யுங்கள் என கூறியிருந்தார். இது தஞ்சை பெரிய கோவிலுக்கு எதிராக அவர் பேசுவதாக பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் நடிகை ஜோதிகா மருத்துவமனைக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என முன்பே கூறியது போல
இன்று ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை அகரம் பவுண்டேஷன் சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை முன்னிலையில் திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்கியுள்ளார். மேலும் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகை ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்