96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஜுராசிக் பார்க் புகழ் நடிகருக்கு இரத்த புற்றுநோய்; இறுதி வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் சோகம்.!
ஹாலிவுட்டில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான ஜுராசிக் பார்க் திரைப்படம் உலகளவில் ரசிகர்களை பெற்ற படங்களில் ஒன்றாகும். உலகில் மறைந்த விலங்குகளாக கருதப்படும் டயனோசர்களை மீண்டும் தட்டியெழுப்பி, அதனால் வரும் விளைவுகளை நாயகன் சரி செய்வது தொடர்பான கதையம்சத்தை படம் கொண்டிருக்கும்.
இந்த படத்தில் நடித்த நடிகர் சாம் நீல். இவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறார். இரத்த புற்றுநோயின் தாக்கத்தால் இறுதிக்கட்ட வாழ்நாட்களை அவர் எண்ணி வருகிறார்.
இதனால் தனது பயோகிராபி எழுதும் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளார். அவர் தனது நண்பர்கள், உறவினர்களோடு நேரத்தை செலவழிக்க முயற்சித்தபோதும், பயோகிராபி பணிகளால் அதனை தவிர்த்துள்ளார்.