96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
புதிய சாதனை படைத்த 'கடைக்குட்டி சிங்கம்'..! டிவிட்டரில் வெளியிட்ட இயக்குனர்
தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டு முழுவதும் திரையரங்குகளில் ஓடிய படங்களெல்லாம் வெளிவந்த கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய நிலையில் ஒரு படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடுவதே பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சாதனையை தான் படைத்திருக்கிறது 'கடைக்குட்டி சிங்கம்'.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசும் விதமாக அமைந்துள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. முதல் முறையாக கார்த்தி – சூர்யா கூட்டணியில் வந்த படம்.
கார்த்தி, சாயிஷா சைகல், சூரி ஆகியோர் நடிப்பில் ஜூலை-13 தேதி வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குடும்ப கதையையும், விவசாயத்தையும் மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூலில் நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளது.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் வசனத்தைப் போல, விவசாயம் செய்யும் உறவுகளின் பெயருக்கு அருகில் விவசாயி என பட்டம் போடப்பட்டுள்ளது. சிலர் திருமணப் பத்திரிக்கையை அச்சிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த இந்திய துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவும் பாராட்டினார். இப்படத்தின் 50 வது நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
#கடைக்குட்டிசிங்கம் 50வது நாள்
— Pandiraj (@pandiraj_dir) August 30, 2018
70 திரையரங்குகளில் 😍😍😍
அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
இன்னுமொரு நல்ல படைப்புடன்
உங்களை விரைவில் சந்திக்கிறேன் 😎#MegaBlockBusterKKS50Days@Karthi_offl @Suriya_offl @immancomposer @rajsekarpandian @sayyeshaa @sooriofficial @SF2_official pic.twitter.com/6PBseKGrKg