‘தர்பார்’ சிறப்புக்காட்சிக்கு அனுமதி உண்டா? அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பதிலை பார்த்தீர்களா!



kadampur raju talk about darbar movie

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை மற்றும் வானரமுட்டி பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும்விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி,  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், தர்பார் படத்தில் உள்நாட்டு இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல், வெளிநாட்டுக் களைஞர்களை பயன்படுத்தியது குறித்து எழுந்து குற்றச்சாட்டு குறித்து கேட்ட பொழுது, அவர் திரைப்படத்தில் எந்த கலைஞரை பயன்படுத்த வேண்டுமென்பது தயாரிப்பாளர்களின் முடிவு. இதில் அரசு தலையிட முடியாது. மேலும்  இதை திரைப்படம் வெளிவரும் போது சொல்வதைவிட, தயாரிக்கும்போது சொல்லி இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tharbar

மேலும் தர்பார் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்த கேள்விக்கு, தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு இதுவரை அனுமதி கேட்கப்படவில்லை. திரைப்படம் 9ஆம் தேதி தான் வெளியாக உள்ளது. மேலும் முறைப்படி யார் அணுகினாலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

 நடிகர் விஜய், அஜித், ரஜினியின் படங்களுக்கு இதுவரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  எனவே தயாரிப்பாளர்கள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வேண்டும் என அரசை அணுகினால், முதல்வரின் ஆலோசனைப்படி பரிசீலிக்கப்படும்” என்றார்.