96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்.? அமைச்சர் கடம்பூர் ராஜு.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், நேற்று முன்தினம் முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எனவே தமிழகத்தில் விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். மேலும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதியின் விலகல் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, முரளிதரனே 800 திரைப்படத்தை கைவிடுமாறு கூறியதால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் மேலும் அது முடிந்த செய்தி எனவும், இனி அதைப்பற்றி பேச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.