நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
டேனியல் பாலாஜியின் மறைவு; மனமுறுகிப்போன கமல் ஹாசன்.. நெகிழ்ச்சி பதிவு.!
தமிழ் திரையுலகில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா, பிகில் உட்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் டேனியல் பாலாஜி.
படங்களில் வில்லனாக நடித்தாலும், பண்புள்ள குணம் கொண்டவராக இருக்கும் பாலாஜி, இறைபக்தி மிகுந்தவர் ஆவார். இதனால் கோவிலையும் கட்டி இருந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
நடிகர் முரளியின் நெருங்கிய உறவினரான பாலாஜி, முரளி போல மாரடைப்பால் காலமானது அவரின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் அவரின் வீட்டிற்கு சென்று நேரில் தங்களின் அஞ்சலியை பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கண்தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி" என தெரிவித்துள்ளார்.