96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#BigBreaking: சர்ச்சைப்பேச்சால் கைதான கனல் கண்ணனுக்கு 11 நாட்கள் சிறைவாசம் - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!
பெரியார் குறித்து சர்ச்சையான வகையில் பேசி சிக்கிக்கொண்ட கனல் கண்ணனுக்கு 11 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில் "இந்துக்கள் உரிமை மீட்பு" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது. அப்போது, அதில் பங்கேற்ற சினிமா நடிகரும், ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் "திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி" என்று கூறியிருந்தார். இவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, பெரியார் திராவிட கழகம் சார்பில் கனல் கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய, வழக்கில் முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டது. தலைமறைவாகிய கமல் கண்ணன் புதுச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட சண்டைக்காட்சி கலைஞர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கனல் கண்ணனுக்கு 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுமதி வழங்கினர். இதனால் அவர் இன்றில் இருந்து 11 நாட்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்.