ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தீவிர சண்டைப் பயிற்சி! ஆக்ஷன் ஹீரோயினாக கெத்து காட்டும் சர்ச்சை நாயகி! வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் தாம்தூம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். அவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து கங்கனா மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், தாலிபான் தீவிரவாதிகளை போல ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கங்கனாவிற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது.
I have started action training for my upcoming action films #Tejas and #Dhakaad I play a Fauji and a Spy respectively in these films. Bollywood ki thali may have given me a lot but post Manikarnika success I too have given Bollywood it’s first ever legitimate action heroine ❤️ pic.twitter.com/0gkNqk3yuo
— Kangana Ranaut (@KanganaTeam) October 16, 2020
கங்கனா ரணாவத் தற்போது மேவரா இயக்கத்தில் உருவாகும் தேஜஸ் என்ற திரைப்படத்தில் விமானப்படை விமானியாகவும், ரஸ்னீஷ் ராஸிகாய் இயக்கத்தில் உருவாகும் தக்காட் என்ற படத்தில் உளவாளியாகவும் நடிக்கஉள்ளார். இத்தகைய இரு ஆக்சன் படத்திற்காக கங்கனா தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அத்தகைய வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.