கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
எல்லாமே என்னாலதான்.. அப்பா இறந்துட்டாரு., தற்கொலை செய்ய நினைச்சேன் - மனமுடைந்த தனுஷ் பட நடிகை..!!
கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரம்யா. இவர் புனித் ராஜ்குமாரின் அபி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமான நிலையில், தமிழில் சிம்புவின் குத்து படம் மூலமாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தனுசுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், ஜீவாவுடன் சிங்கம் புலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மொத்தமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 36 படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர் பெரும்பாலான படங்களில் நடிக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத் தொகுதியில் எம்பி-யாக ஆனார். கட்சி பணிகளில் பிஸியாக இருந்த அவர் நடிப்பிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் அப்பா இறந்துவிட்டார். எம்பி-யாக இருந்ததால் வேலைப்பளு காரணமாக என் அப்பாவோடு இறுதிநேரத்தில் கூட இருக்க முடியவில்லை.
எல்லாமே என்னால்தான். அவருடன் நான் இல்லாத நிலையை நினைத்து மனவேதனை அடைந்தேன். உச்சகட்ட வேதனை ஏற்பட்டு நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்தேன். அந்த சமயத்தில் எனது மனவேதனையை புரிந்துகொண்ட ராகுல் காந்தி ஆறுதல் கொடுத்து தைரியப்படுத்தினார்" என்று பேசினார்.