96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருமணமான ஒரே மாதத்தில் தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் பிரபலம்! வெளியான பகீர் தகவல்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
திருமணமான ஒரு மாதத்திலேயே கன்னட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சைத்ரா தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர் நடிகை சைத்ரா. இவர் கடந்த மாதம் மாண்டியாவை சேர்ந்த நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இருவருமே கடந்த சில ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் திருமணத்திற்கு மணமகனின் குடும்பத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். மேலும் திருமண நிகழ்ச்சியில் யாரும் கலந்து கொள்ளவில்லையாம். இந்த நிலையில் சைத்ரா தற்போது பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார்கள் அவரது கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சைத்ரா கண்விழித்து கூறினால் தான் உண்மை தெரியவரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.