"நச் நச்" ன்னு லிப்லாக் அடித்த வீடியோவை வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்.. பாத்துங்க கடிச்சிடும்..! பதறிப்போன ரசிகர்கள்..!!



Keerthi Pandian liplock with dog video

தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான "தும்பா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் கீர்த்தி பாண்டியன். இப்படத்திற்குப் பின் இவர் அன்பிற்கினியாள் என்ற படத்திலும் நடித்தார். இவர் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான அருள்பாண்டியனின் மகளாவார்.

மேலும், நடிகை ரம்யா பாண்டியனின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அயோக்கியா, மாநாடு, காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள கண்ணகி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

Actress Keerthi Pandian

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், அவர் வளர்த்த நாய் அவரது பின்னாலிருந்து வருகிறது. அருகில் வந்தவுடன் அவர் நாயின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கிறார். இதனை சிலர் அழகு என்று கூறினாலும், பலர் பாத்துங்க கரிச்சிடும் என்றும் கூறி வருகின்றனர்.