குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"! 'நான் ஈ' பட ஹீரோவுடன் ரீல்ஸ்! இன்ஸ்ட்டா, ட்விட்டரை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர்.
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் வெகுவாக அறியப்பட்டவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நானியுடன் நடித்திருக்கும் தசரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி ஆறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாகயிருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தனது போட்டோ ஷூட் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களின் மூலமாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'கருப்பை ஏற்றுக் கொண்டேன்' என்கிற வாசகத்துடன் இடம் பெற்றுள்ள அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதே கருப்பு சேலையுடன் 'நான் ஈ' பட ஹீரோ நானியுடன் நடனமாடி ரீல்ஸ் ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.