மீண்டும் செம கெத்தான ரோலில் மிரட்டவிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்! வெளிவந்த மாஸ் தகவல்!!



Keerthi suresh going to act as police in cyper movie

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான  சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களுள் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அவர் தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் படத்தில் நடிக்க உள்ளார். ஆன்டனி பாக்கியராஜ் இரும்புத்திரை, விஸ்வாசம் போன்ற படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர். இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெயம்ரவி நடிக்கிறார். மேலும் யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

keerthi Suresh

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ளது. சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இதுகுறித்து இயக்குனர் கூறுகையில், கீர்த்தி சுரேஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவிக்கு இணையாக நடிக்க உள்ளார். ஆனால் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடி இல்லை என கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே சாணிக்காயிதம் திரைப்படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருந்தார்.