குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
என்னது.. கீர்த்தி சுரேஷின் இந்த படம் ஓடிடியில் ரிலீசாகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! உண்மையை உடைத்த படக்குழு!!
நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட்லக் சகி'. இதில் கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதிர் சந்திர பத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. குட்லக் சகி படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையால் நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் குட்லக் சகி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளோம் என ஊடகங்களில் தவறான செய்தி பரவி வருகிறது. அவை எதுவும் உண்மையில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நாங்கள் அதுகுறித்த தகவல்களைத் தெரிவிக்கிறோம். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நன்றி என தெரிவித்துள்ளார் .