ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே! நடிகை குஷ்புவிற்கு என்னாச்சு.? பதறிப்போன ரசிகர்கள்!
இளம் வயதிலேயே சினிமாவில் பிரபலமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் குஷ்பு. இவர் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டிய சுவாரஸ்ய சம்பவமெல்லாம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்துகொண்டு குடும்பம், அரசியல் என செட்டிலாகிவிட்டார். வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்த அவர் சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனோ ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டநிலையில் வீட்டில் இருக்கும் நடிகை குஷ்பு அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
Hi friends, will be inactive for a while as I had to go under a knife for my eye this morning.. promise to be back soon. Take care, wear a mask if heading out and maintain a distance. ❤ pic.twitter.com/K7d5plvsym
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 19, 2020
இந்நிலையில் அவர் தற்போது தனது ஒரு கண்ணில் கட்டுப்போட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தனது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், சிறிது காலம் தனது தனது சமூக வலைதளப்பக்கங்கள் செயலற்று இருக்கும். அனைவரும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து கவனமுடன் இருங்கள் என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.