96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எச்சில் தட்டை கழுவுறது, டாய்லெட் கிளீன் பண்றதெல்லாம் என்னால முடியாது! பிக்பாஸ் குறித்து பிரபல நடிகை பளீர் பதில்!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா என கேள்விகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி 6 மணிக்கு தொடங்கவிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை லட்சுமிமேனன் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை.
அங்கு பிறர் சாப்பிட்ட தட்டுகளை கழுவவும், மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை சுத்தம் செய்யவும் செல்ல போவதில்லை. மேலும் நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன்பு நின்று சண்டை போடவும் போவதில்லை. இதற்கு பிறகாவது நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக பரப்பும் செய்திகளை நிறுத்துவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இதனை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.