96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பொய் சொல்லி மாட்டி கொண்ட லாஸ்லியா! வெளியான புகைப்பட ஆதாரம் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் சீசன் 3, 60 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடி வருகிறது. வீட்டில் எப்போதும் காதல், சண்டை, சச்சரவுகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
முதலில் கவின், லாஸ்லியா, சாக்ஷி என முக்கோண காதல் கதை அரங்கேறியது. அதன் பிறகு அபிராமி, முகேன் காதல் கதை. இந்நிலையில் கடந்த வாரங்களில் அபிராமி மற்றும் சாக்ஷி வீட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது லாஸ்லியா மற்றும் கவின் ஜோடிகள் மட்டுமே உள்ளே உள்ளனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு லாஸ்லியாவிடம் கவின் நீங்கள் பிறந்த நாள் விழா கொண்டாடும் பழக்கம் உள்ளதா என கேட்டிருப்பார். உடனே லாஸ்லியா எனக்கும் ஆசையாக இருக்கும், ஆனால் கொண்டாடியது கிடையாது என பதில் கூறினார்.
தற்போது சமூக வலைத்தளத்தில் லாஸ்லியா பிறந்த நாள் கொண்டாடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த லாஸ்லியா ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.