"வாய்ப்புக்காக அந்த மாதிரி கேரக்டர்களில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்ட நடிகைகள்!"



Latest news about heroines

பெரும்பாலும் சினிமாவில் நல்ல கேரக்டருக்காக காத்திருந்து, நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெறவே பலரும் விரும்புவர். ஆனால் தற்போது வரும் நடிகைகள் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற ரீதியில் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வருகின்றனர்.

ramya

அப்படி தனது சினிமா கேரியரில் மோசமான கதாப்பாத்திரங்களில் நடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்ட நடிகைகள் சிலரை பார்ப்போம். மைனா, தலைவா, தெய்வத்திருமகள் என பல வெற்றிப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நல்ல பெயர் பெற்றவர் நடிகை அமலா பால்.

ஆனால் இவரது முதல் படமான சிந்து சமவெளியில் ஒரு மோசமான கேரக்டரில் நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். அதேபோல் ரம்யா கிருஷ்ணன் ஆரம்பத்தில் கிளாமராக நடித்தாலும் பின்னர் அம்மன் கேரக்டரில் நடித்தார். பின்னர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவரது கேரக்டர் விமர்சிக்கப்பட்டது.

 ramya

சங்கீதாவுக்கு பிதாமகன் படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தொடர்ந்து "உயிர்" படத்தில் மோசமான பெண்ணாக நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்டார். மேலும் சதா, நயன்தாரா ஆகியோரும் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதாக நினைத்து விலைமாதுவாகவும், லிப் லாக் காட்சிகளிலும் நடித்து பெயரைக் கெடுத்துக்கொண்டனர்.