#Breaking: லியோ திரைப்படம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி: தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.!



Leo Movie Special Show 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இப்படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ தரச்சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 

இப்படத்தில் நடிகர்கள் இளைய தளபதி விஜய், திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மனோபாலா, ஜாபர் சித்திக், அபிராமி உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.

Leo

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிரைலரின்படி நடிகர் விஜய் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் வில்லத்தனத்தில் மாஸ் காண்பித்து இருக்கின்றனர். விஜயின் மாறுபட்ட கதாபாத்திரம் விஸ்வரூபம் எடுக்கும்போது படம் திரையில் சூடேறும்.

இந்நிலையில், லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அக்.19ம் தேதி அன்று அதிகாலை 4 மணிமுதல் சிறப்புக்காட்சிகளுடன் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல, அக்.20 முதல் அக்.24ம் தேதி வரையில் காலை 7 மணிக்கு முதல் காட்சி என நாளொன்றுக்கு 5 காட்சிகளை திரையிட அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.