#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு.. மறுத்து பேசி முடிவை மாற்றிய விஜய்.?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இளைய தளபதி எனும் பெயர் பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'வாரிசு' திரைப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மேலும் காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற நிலையில், லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முடிவை விஜய் மறுத்து பேசியிருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து இப்படத்தின் பாடல் காட்சிகளில் நடனமாடுவதற்கு இரண்டாயிரம் டான்ஸர்கள் வேண்டும் என்பதால் வேறு மாநிலங்களிலிருந்து வர வைக்கலாம் என்று லோகேஷ் கனகராஜ் கூற விஜய் தமிழ்நாட்டில் இருப்பவர்களையே இப்படத்தில் டான்சர்களாக எடுக்கலாம் மற்ற மாநிலங்களில் இருந்து வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.இந்த செய்தி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.