மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
வெளியீடுக்கு விறுவிறுப்புடன் தயாராகும் விடாமுயற்சி.. பதிவு செய்யப்பட்ட பேனர்.!
![lyca-productions-vidaamuyarchi-movie-update](https://cdn.tamilspark.com/large/large_img-20250126-wa0076-76415.jpg)
லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் ரவிச்சந்தரும், ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ், நீரவ் ஷாவும் மேற்கொண்டுள்ளனர். எடிட்டிங் பணிகளை என்.பி ஸ்ரீகாந்த் கையாண்டுள்ளார்.
ஓடிடி, டிவி வெளியீடு உரிமை
பலகோடி பொருட்செலவில் எடுக்கப்படும் விடாமுயற்சி திரைப்படம், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் ரூ.100 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. சன் தொலைக்காட்சி நிறுவனம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் படம் வெளியாகிறது.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
வெளியீடுக்கு தயாராகிறது
இந்நிலையில், வெளியீடுக்கு தயாராகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் பேனர், சென்னையில் உள்ள ஸ்ரீ கங்கா சினிமாஸில் தற்போதே பதிவு செய்யபட்டுள்ளது. பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமைகளை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
A HUGE #VidaaMuyarchi Banners Up At Sri Ganga Cinemas! 🔥💥 pic.twitter.com/mcJQYGNdgG
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 26, 2025
இதையும் படிங்க: #Breaking: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. தமிழ்நாட்டுக்கே பெருமை.!