இதெல்லாம் ரொம்ப அநியாயம்! கேட்க ஆளே இல்லையா! கொந்தளித்த பிகில் பிரபலம்! ஏன் தெரியுமா?



lyrist-vivek-tweet-to-atlee

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து உருவாகிய படம் பிகில். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றது.

Bigil

மேலும் இந்த படத்தில் கால்பந்து வீரராக நடித்திருந்த விஜய் 5 எண் போட்ட சிவப்பு நிற ஜெர்ஸி ஒன்றை அணிந்திருந்தார். இந்நிலையில் அதனை போன்றே 5 எண் போட்ட சிவப்புநிற ஜெர்ஸியை அணிந்தவாறு அட்லீ மற்றும் அவருடன் நடித்தவர்கள் இருந்த புகைப்படத்தை  சமீபத்தில் அட்லீ வெளியிட்டார்.

இந்நிலையில் இதனை கண்ட பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாரும் இல்லையா? எனக்கும் புல்லிங்களுக்கு டீ ஷர்ட் பார்சல் ப்ரோ என அட்லீயிடம் கேட்டுள்ளார்.