கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
சர்க்கார் திரைப்படத்தை பார்த்த நடிகர் மகேஷ்பாபு என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் குறித்து நடிகர் மகேஷ் பாபு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
#Sarkar is an engaging political drama!! Thoroughly enjoyed it... An @ARMurugadoss trademark film👏👏👏 Congrats to the entire team👍
— Mahesh Babu (@urstrulyMahesh) November 7, 2018
இந்த நிலையில், இப்படம் குறித்து ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து ஸ்பைடர் படத்தில் நடித்திருந்த நடிகர் மகேஷ் பாபு கருத்து தெரிவித்துள்ளார். தளபதியின் சர்கார் படம் குறித்து மகேஷ் பாபு டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சர்கார் ஒரு உற்சாகமூட்டும் அரசியல் நாடகம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முழுவதுமாக இப்படத்தில் முத்திரை பதித்துள்ளார் என்று கூறியுள்ளார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3,400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்கார் படம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சர்க்கார் படத்தின் உங்களுடைய கருத்தை கீழே கமெண்ட் செய்யவும்.