ஜாலியோ ஜிம்கானாதான்.! 15 மனைவி, 107 பிள்ளைகள்.! அந்த மன்மத நபர் சொன்ன காரணத்தை பார்த்தீங்களா!!



man-got-15-marriage-and-107-children

கென்யா மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் டேவிட் சகோயோ கலுகானா. இவருக்கு திருமணமாகி மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர். அவர்கள் அனைவருடனும் டேவிட் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். டேவிட் மற்றும் அவரது 15 மனைவிகளுக்கு மொத்தம் 107 குழந்தைகள் உள்ளனர்.

இதில் ஒரு மனைவியுடன் டேவிட்டுக்கு 15 குழந்தைகள் உள்ளனராம். டேவிட்டின் மனைவிகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பொறாமை இல்லாமல், மிகவும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனராம். வரலாற்று பேராசிரியரான டேவிட் இதுக்குறித்து கூறுகையில், முன்பு ஒரு காலத்தில் அரசராக இருந்த சாலமன் 700 மனைவிகளை கொண்டு வாழ்ந்து வந்தார். அவரை விட தான் குறைந்தவர் இல்லை என்பதால் அதிக பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.

marriage

மேலும் பல பெண்களின் கண்களில் நான் புத்திசாலித்தனம் மிக்கவனாக தெரிகிறேன். அதனால்தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். டேவிட் தனது மனைவியகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.