96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நடிகையாக புதிய அவதாரம் எடுத்த மணிமேகலை! எந்த சீரியலில் தெரியுமா?
பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை. இவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.
இந்நிலையில் விஜே மணிமேகலை, நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்த நிலையில், இரு குடும்பத்தாரும் சம்மதிக்காததால் அவர்களை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து அவர்கள் சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த இந்த தம்பதியினர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் அதனைத் தொடர்ந்து மணிமேகலை சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடிகையாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். தற்போது அந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை பதிவிட்டுள்ளார்.
Enaku varatha department - acting la kutty en(try) 🐒 Guest Role. Very Happy to work With Mr Cool director saar Praveen Bennet bro 😎 Do watch Barathi Kannamma Mon - Fri 8:30 pm only on @vijaytelevision 🙌https://t.co/0o2igqcyc5
— MANIMEGALAI (@iamManimegalai) February 10, 2020