"அவர் படுக்கைக்கு போக மறுத்ததால் தான் என்னை படத்தில் இருந்து நீக்கினார்" சீனு ராமசாமிக்கு மனிஷா யாதவ் பதிலடி!



Manisha yadhav controversy post

பாலாஜி சக்திவேல் இயக்கிய "வழக்கு எண் 18/9" என்ற படத்தில் அறிமுகமானார் மனிஷா யாதவ். தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

Manisha

சமீபத்தில் இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்தபோது இயக்குனர் சீனு ராமசாமி மனிஷா யாதவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது" என்று கூறி பரப்பரப்பைக் கிளறியிருந்தாரர்.

இதையடுத்து சீனு ராமசாமி இந்தக் குற்றச்சாட்டை மறுத்து "இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கிராமத்து நாயகியாக நடிக்க மனிஷா யாதவ் செட்டாக மாட்டார் என்று விஷ்ணுவிஷால் ஜோடியாக மாடர்ன் கேரக்டரில் நடிக்க சொன்னேன்.

Manisha

அவர் மறுத்ததால் படத்திலிருந்து நீக்கிவிட்டேன்" என்று கூறியிருந்தார். இதற்கு மனிஷா யாதவ், "படப்பிடிப்பின்போது அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமாக இருந்தது. அவர் ஆசைக்கு இணங்காததால் தான் என்னைப் படத்தில் இருந்து நீக்கினார்" என்று கூறியுள்ளார்.