96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தனுஷை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை! யார்னு பார்த்தீர்களா!!
மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் கடந்த 2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார்.
அப்படத்தில் அவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் மஞ்சு வாரியர் கைவசம் தற்போது மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டு என ஏராளமான படங்கள் உள்ளன.
அதனை தொடர்ந்து மலையாளம், தமிழ் என கொடிகட்டி பறக்கும் மஞ்சு வாரியார் அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் . அதாவது கல்பேஷ் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவாகும் அமெரிக்கி பண்டிட் என்ற பாலிவுட் படத்தில், மாதவனுக்கு ஜோடியாக நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது போபாலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.