நாளை ஓடிடியில் வெளியாகிறது மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம்; விபரம் இதோ.!
நடிகர்கள் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி எஸ்.பொதுவால், லால் ஜூனியர் உட்பட பலர் நடித்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மேல் பாய்ஸ்.
மலையாள மொழியில் வெளியான இப்படம், கேரளாவை சேர்ந்த நண்பர்கள் குழு கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு வந்து சென்ற நிகழ்வை அடிப்படையாக கொண்டு படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இப்படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் மொழிமாற்றம் செய்யப்படாமல் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. பிரேமம் திரைப்படத்திற்கு பின் தமிழக மக்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றது.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மே 05 ம் தேதியான நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தலத்தில் வெளியாகிறது. பிரீமியம் சந்தாதாரர்கள் இப்படத்தை கண்டுகளிக்கலாம்.