ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
100வது நாள்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் யோகிபாபு! அப்படியென்ன விசேஷம் தெரியுமா?
மண்டேலா திரைப்படம் வெளியாகி 100 நாள்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் மண்டேலா. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக யோகி பாபு நடித்திருந்தார். மேலும் அவருடன்
ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பின் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தனிநபரின் வாக்குக்கு எத்தனை மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் இப்படம் கூறியது. தேர்தல் சமயத்தில் இப்படம் வெளியானதால் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
100 days mandela thankyuo pic.twitter.com/TutSiXoTzW
— Yogi Babu (@iYogiBabu) July 13, 2021
இந்நிலையில், மண்டேலா படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து யோகிபாபு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.