13 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகள்..! பட்டையை கிளப்பும் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் மாஸ்டர். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது.
ஏற்கனவே படத்தின் முதல் டிராக் ஒரு குட்டி ஸ்டோரி பாடல் அனிருத் இசையில், விஜய் குரலில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று வெளியான வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.
வாத்தி கம்மிங் பாடல் வெளியான 13 மணி நேரங்களில் 5 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.