திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜீ தமிழ் சீரியல் நடிகைகளுக்குள் ஏற்பட்ட சண்டை: ஷூட்டிங் ஸ்பாட்டில் சேருக்காக நடந்த அக்கப்போர்.. வைரல் வீடியோ உள்ளே.!
சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து பலரும் மக்களிடம் நேரடியாக தங்களின் அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் டிக்டாக்கில் பிரபலமாக இருந்த லயா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் கதாநாயகன் அம்மாவாக நடித்து வருகிறார்.
இத்தொடர் விறுவிறுப்புடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் லயா சேரில் அமர்ந்ததாக தெரிய வருகிறது. அப்போது மூத்த நடிகை ஆனந்தி ராவ் நான் இருக்கும்போது நீ எப்படி உட்காரலாம்? என அவரை எழுந்திருக்க சொல்லியுள்ளார்.
நடிகைக்கும், நடிகைக்கும் சண்டை.! லீக் ஆன புதிய வீடியோ-நடந்தது என்ன? ''மீனாட்சி பொண்ணுங்க''வில் குழாயடி.!#Chennai #SerialActress #Fight #ViralVideo #MeenakshiPonnunga #Serial #NewsTamil24x7 pic.twitter.com/dAqj7fXByV
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) December 31, 2023
இதனால் அங்கு இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் வீடியோ எடுத்தவாறு தாக்கிக் கொண்டுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ நன்றி: News Tamil 24×7