96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா? வெளியான புதிய தகவல்!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரம் அபிராமி, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்வதற்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் யார் போட்டியிலிருந்து வெளியேறுவர் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் மோகன் வைத்யாதான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவரே போட்டியிலிருந்து வெளியேறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.