96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பெண்களுடன் நெருக்கமாக பழகியது இதனால்தானா? உருக்கமாக விளக்கமளித்த மோகன் வைத்யா!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரம் அபிராமி, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் எலிமினேட் செய்வதற்காக நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் மோகன் வைத்யா குறைவான வாக்குகளை பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் வருத்தத்தில் இருந்தனர். மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் நெருக்கமாக இருப்பது, அவர்களுக்கு முத்தம் கொடுப்பது என இருந்தது பெரும் சர்ச்சையை காலிழப்பியது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மோகன் வைத்யா இதற்கு பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அப்பொழுது அவர் நான் பிக்பாஸ் வீட்டில் எந்தவித தவறான எண்ணத்திலும் முத்தம் கொடுக்கவில்லை, கட்டி பிடிக்கவில்லை. என்னுடன் பிறந்தவர்கள் சகோதரர்கள் மட்டுமே. அக்கா தங்கை என யாரும் எனக்கு கிடையாது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் எனது மகள்கள் போன்றே நினைத்தேன். அதனாலேயே அவர்களுடன் நெருக்கமாக பழகினேன் . நான் பொழுதும் உண்மையாகவே இருப்பேன். தவறான கண்ணோட்டம் என்பது எனக்கு எப்பொழுதும் கிடையாது என கூறியுள்ளார்.