குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பிரபல முன்னணி தமிழ்நடிகர் பெயரில் நடந்த பணமோசடி! தகவலை கேட்டு செம ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வெளியான ஆவாரம்பூ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் வினித். அதனை தொடர்ந்து அவர் புதிய முகம், மே மாதம், காதலர் தினம், சந்திரமுகி என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் வினித் பெயரில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மர்ம கும்பல் ஒன்று அவரது பெயரில் போலி கணக்கை துவங்கி, வேலைவாய்ப்பு தருவதாக மோசடியில் ஈடுபட்டு பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த நிலையில் அதிர்ச்சியடைந்த நடிகர் வினித் காவல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் குடும்ப படத்தையும், எனது சமூக வலைத்தள கணக்கை போலியாக பயன்படுத்தியும் பண மோசடி நடக்கிறது. இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.