"இந்த மாதிரி கஷ்டங்களை எல்லாம் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை" மிருணாள் தாகூரின் வேதனையான பேட்டி..



Mrunal thakur latest interview

இந்திய சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் மிருணாள் தாகூர். விளம்பர படங்களில் நடித்தும், மாடல் அழகியாகவும் இருந்து வந்தவர் மிருணாள் தாகூர். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் 'சீதாராமம்' திரைப்படத்தின் மூலமாகவே பிரபலமானார்.

tollywood

இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை அடைந்து ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். இப்படத்திற்கு பின்பு தற்போது 'ஹாய் நானா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரும் வெற்றியை அடைந்து வருகிறது. இதனை அடுத்து சமீபத்தில் யூட்யுப் சேனலுக்கு பேட்டியளித்த மிருணாள், ஹாய் நானா படத்தில் நடித்ததை பற்றி பேசி இருக்கிறார்.

tollywood

இது குறித்து அவர் பேசியதாவது, "இப்படத்தில் ஒரு பாடல் வரும். அந்த பாடலை காட்சிப்படுத்தும் போது நடிப்பதற்கு மிகவும் சவாலாக இருந்தது. மற்ற காட்சிகள் கூட இந்த அளவிற்கு கஷ்டமாக இல்லை. ஹாய் நான்னா படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்" என இவ்வாறாக பேட்டியில் பேசினார்.