குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை.. சோகத்தில் ரசிகர்கள்.!
இந்திய கிரிக்கெட் அணியில் அனைவராலும் கொண்டாடப்படக்கூடியவர் எம்.எஸ்.தோனி. சமீபத்தில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வெளியிட்டனர். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
எம்.எஸ்.தோனி படத்தில் ஹுரோவாக நடித்த சுஷாந்த் சிங் சில மாதங்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்த கொண்ட நிலையில் நேற்றிரவு அதே படத்தில் நடித்த சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டார்.
சந்தீப் நஹர் இறப்பதற்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள், குறிப்பாக அவரது சிக்கலான திருமணம் பற்றி பேசினார்.
ஆனால், அதே வேளையில் தனது மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். சந்தீப் நஹரின் தற்கொலை முடிவு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.