மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாதவனின் திரைப்படத்திற்காக தேசிய விருது.. கொண்டாட்டத்தில் மாதவன் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளம் வந்தவர் மாதவன் இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தவர் மாதவன்.
ஆரம்ப காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன், சமீபத்தில் ஆக்சன் ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மாதவனின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சமீபத்தில் மாதவன் நடித்து இயக்கிய ஒரு திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பிராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட 'ராக்கெடிரி ' திரைப்படத்தில் மாதவன் நடித்து இயக்கியிருந்தார். இப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.