குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வாவ்.. இளசுகளின் கனவுகன்னி நயன்தாரா குழந்தையாக எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! கண்ணுப்பட வைக்கும் கியூட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை தொடர்ந்து அவர் அஜித், விஜய், ரஜினி, விக்ரம், சூர்யா, தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல ஹீரோக்களுக்கு இணையாக இந்தியளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். நடிகை நயன்தாரா தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கக்கூடிய ஒரே ஹீரோயின் இவர் ஆவார்.
இந்நிலையில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நயன்தாரா குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். தற்போது நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் செம க்யூட் என கொஞ்சி வருகின்றனர்.