குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ரஜினியின் தர்பார் படத்தின் புது அப்டேட்! என்ன தெரியுமா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் பேட்ட. கடந்த பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பேட்ட படத்தை அடுத்து தற்போது இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது. தற்போது படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடந்துவருகிறது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தர்பார் படத்தை தயாரிக்கின்றது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் படத்தின் நாயகி நயன்தாரா கலந்துகொள்ள இருப்பதாக படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
#Nayanthara joins the sets of thalaivar's #Darbar today 😌😇@ARMurugadoss @santoshsivan @anirudhofficial #IdhuThalaivarinDarbar pic.twitter.com/tA7vhVlKBo
— Lyca Productions (@LycaProductions) April 23, 2019