96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஜோடியாக புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவன்! ப்பா.. அதுவும் எங்கு பார்த்தீங்களா! வீடியோ இதோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக இருவரும் சிறந்த காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இருவரும் சுற்றுலா செல்வது, விழாக்களை ஒன்றாக கொண்டாடுவது என ரொமான்டிக் ஜோடியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் துபாயில் புத்தாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். உயரமான கட்டடத்திற்கு அருகே இருவரும் புத்தாண்டை வரவேற்ற வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.