காதலனுடன் கோவிலுக்கு சென்ற நயன்தாரா! படையெடுத்து நின்ற ரசிகர்கள்!

Nayanthara with lover in temple

மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள அம்மன் கோயிலில் நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்.

கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பிரசித்த பகவதியம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

nayanthara

நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணைத்தில் வேகமாக பரவி வருகின்றன. 
மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள அம்மன் கோயிலில் நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகை நயன்தாரா கோயிலுக்கு வந்த செய்தி பரவியதை அடுத்து அப்பகுதியில் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். நயன்தாராவின் ரசிகர்கள் செல்பி எடுப்பதற்காக செல்போனுடன் கோவிலில் காத்திருந்தனர்.