குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தயவு செய்து அதை மட்டும் பண்ணாதீங்க.! ரசிகர்களுக்கு நயன்தாரா வைத்த முக்கிய வேண்டுகோள்.!
கடந்த 2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை நயன்தாரா, அடுத்தடுத்து தனக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்புகளை பயன்படுத்தி, அதன் மூலமாக முன்னணி நடிகையாக உயர்ந்தார். மேலும் அதன் பிறகு அவர் சந்தித்த தொடர் தோல்விகளால், கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தார்.
தன்னுடைய காதலுக்காக மதம் மாறிய நயன்தாரா, அதன் பிறகு சினிமாவிலிருந்து மெல்ல, மெல்ல ஒதுங்கத் தொடங்கினார். ஆனால் அந்த காதல் தோல்வியை சந்தித்த பின்னர் மறுபடியும் திரை துறையில் காலடியெடுத்து வைத்தார். அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அதன்படி அவர் நடித்த அறம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களாக மாறின. இந்த வெற்றிகளுக்கு பின்னர் தான் நயன்தாராவை அவருடைய ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்க தொடங்கினர்.
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது அந்த திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவிற்கு காதல் ஏற்பட்டது. இதன் பின் சென்ற வருடம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இருவரும் திருமணம் செய்து கொண்டதோடு, வாடகை தாயின் மூலமாக இரண்டு ஆண் குழந்தைகளை அவர்கள் பெற்றெடுத்தனர். இதன் பின்னராவது நயன்தாரா சினிமாவிலிருந்து ஒதுங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனாலும் அதன் பிறகும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் நயன்தாரா. அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து, அவருக்கு ஹிந்தி திரை துறையில் பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே தமிழில் அவர் நடித்த இறைவன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்த அந்த திரைப்படம் சென்ற 1ம் தேதி திரைக்கு வந்தது.
இந்த சூழலில் தான் அன்னபூரணி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, ஒரு தனியார் ஊடகத்திற்கு நயன்தாரா பேட்டியளித்தார். அந்த பேட்டியில் நான் சம்பாதித்திருக்கும் புகழ், பணம் எல்லாமே என்னுடைய ரசிகர்கள் எனக்கு கொடுத்தது. நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தயவு செய்து என்னை யாரும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம், எல்லோரும் திட்டுவார்கள் என்று கூறியிருக்கிறார்.