குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
எப்புடி இருந்த நயன்தாராவ இப்புடி மாத்திட்டாங்களே! வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் ஐரா படததின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படங்களான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நயன்தாரா நடிப்பில், மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் தற்பொழுது ஐரா விறுவிறுப்பாக உருவாகி வெளியாகும் நிலையில் உள்ளது.
இப்படத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு வேடத்தில் இயல்பாக தோற்றமளிக்கும் நயன்தாரா, மற்றொரு வேடத்தில் கருமை நிறமாக சோகத்தில் காட்சியளிக்கிறார். இது திகில் படம் என்பதால், நயன்தாராவின் மற்றொரு வேடம் பேயாக இருக்கம் என தெரிகிறது.
இந்நிலையில் கருமை நிறத்தில் நடித்திருக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள் இன்று வெளியாகின. எப்படி இருந்த நயன்தாரா இப்படி ஆயிட்டாரே என ஆச்சர்யப்படும் அளவிற்கு அவைகள் உள்ளன.
#BhavaniAiraaClicks 📸 pic.twitter.com/c7K2Rf2FuL
— Nayanthara✨ (@NayantharaU) February 7, 2019