96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அமைச்சர் விடுத்த அதிரடி அறிவிப்பு.! எதிர்பார்ப்பில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்!!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் அக்காவாக நடிகை தேவதர்ஷினி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தையே அதிர வைத்தது.
மேலும் பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளிவர உள்ளது என தகவல்கள் வெளி வந்தநிலையில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தீபாவளியை முன்னிட்டு பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கபடவில்லை. மேலும் விதியை மீறி ஒளிபரப்பினால் திரையரங்கு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.