96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எனக்கு அந்த பழக்கம் அப்பவே இருந்தது.! ஆனால் அந்த பழக்கத்தை விட்டொழிக்க உதவியது இது தான்.! ஓப்பனாக பேசிய ஓவியா.!
தமிழ் சினிமாவில் நடிகர் விமலுடன் இணைந்து களவாணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்றது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே கூறலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித் ஓவியாவுக்கு பெரும் ஆர்மியும் உருவானது. ஓவியா பிக்பாஸ் வெற்றியாளராக வருவார் என ரசிகர்களால் எதிர்பார்த்த நிலையில், மற்றொரு போட்டியாளரான ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையால், தற்கொலை முயற்சி செய்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளிவந்த பிறகு பெரிய படவாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நடித்த படங்கள் எல்லாமே எக்குத்தப்பான கேரக்டரில் இருந்ததால் அவருடைய திரைப்பயணம் மந்தமாகவே இருந்தது. குறிப்பாக இவர் நடித்த 90 ML படம் இரட்டை அர்த்தம், புகை பிடித்தல் போன்ற காட்சிகள் படத்தில் காணப்பட்டது.
ரசிகர்கள் பலரும் படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு புகைப்பிடித்தல் போன்ற காட்சிகளில் நடித்துள்ளீர்களே என கேள்வி எழுப்பினர். இந்நிலையில், நடிகை ஓவியா தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறினார். மேலும், அதைப்பற்றிய விளைவுகளை அறிந்த பின்னர் தான் விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.