குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"நான் சிறுநீர் கழித்த மரத்தின் பழங்களை சாப்பிடுவார்கள்!" பா. ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
தமிழ் திரையுலகில் முக்கியமான அறியப்படும் இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருப்பவர் பா. ரஞ்சித். 2012ம் ஆண்டு "அட்டகத்தி" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2014ம் ஆண்டு கார்த்தியை வைத்து "மெட்ராஸ்" படத்தை இயக்கினார்.
மேலும் தொடர்ந்து பா. ரஞ்சித், ரஜினியுடன் காலா, கபாலி ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார். இதையடுத்து ஆர்யாவுடன் "சார்பட்டா பரம்பரை", இதையடுத்து நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பா. ரஞ்சித், தற்போது "தங்கலான்" படத்தை இயக்கி வருகிறார்.
விக்ரம் நடிக்கும் இப்படம், வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய பா. ரஞ்சித் " எனது பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பப்பாளி மரத்தில் இருக்கும் பழத்தை பறித்து சாப்பிடுவார். ஆனால் அதுவே நாங்கள் எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்.
ஆனால் அந்த மரத்தில் தான் நான் சிறுநீர் கழிப்பேன். என் அண்ணன் மகள் மலம் கழிப்பாள். அதில் விளைந்த பழத்தை ருசித்து சாப்பிடும் அவர்கள், நாங்கள் கொடுத்தால் மட்டும் சாப்பிட மாட்டார்கள்" என்று சிரித்துக்கொண்டே பா.ரஞ்சித் பேசியுள்ளது தற்போது சர்சையைக் கிளப்பியுள்ளது.