96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில்... தங்கலான் திரைப்படம் அப்டேட் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித்.!
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் அவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்தத் திரைப்படத்தில் அவருடன் ஃபகத் பாஸில் வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சூரி விஜய் ஆண்டனி இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் மாமன்னன் திரைப்படம் மிக அற்புதமாக உருவாகி இருப்பதாக தெரிவித்தார். இந்தப் படத்தின் சில காட்சிகளை மாறி செல்வராஜ் தனக்கு திரையிட்டு காட்டியதாகவும் இந்தத் திரைப்படம் மாரி செல்வராஜின் அரசியலை பேசும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ரஞ்சித் இயக்கி வரும் தங்களால் திரைப்படம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு இன்னும் 12 நாட்கள் தான் சூட்டிங் மீதம் இருப்பதாக தெரிவித்தார். விரைவிலேயே மீதி இருக்கும் விரைவாக படமாக்கப்படும் எனவும் தெரிவித்தார். சியான் விக்ரம் நலமுடன் இருப்பதாகவும் சூட்டிங் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார் ரஞ்சித்.