96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இனிதான் சூடுபறக்கும்! எரிமலையாய் வெடித்த பாக்கியா எடுத்த அதிரடி முடிவு! வெளிவந்த பரபரப்பு வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது அதிரடி திருப்பங்களுடன், மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகிவரும் தொடர் பாக்கியலட்சுமி . ஒரு இல்லத்தரசியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு அனைத்து பெண்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பு உள்ளது. பாக்கியலட்சுமி தொடரில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் தொடர்பு வைத்திருக்கும் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த எபிசோடுகளில் பாக்கியலட்சுமிக்கு தனது கணவர் ஏமாற்றுவது, தன் கணவருக்கு ராதிகாவுடன் தொடர்பு இருப்பது குறித்த உண்மை தெரியவந்துள்ளது. இதனை அறிந்த அவர் மிகவும் வேதனையும், ஆக்ரோஷம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள அனைவரின் முன்பும் தனது கணவரின் மோசமான முகத்திரையை கிழித்த அவர், பின் கோபியிடம் உங்க விருப்பப்படி வாழுங்கள் என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்த பின் தொடர்கின்றனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வைரலான நிலையில் இனிதான் சீரியல் சூடுபிடிக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.