96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என்னவொரு ஆக்ரோஷம்.! கோபியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய பாக்கியா! அனல்பறக்கும் ப்ரோமோ வீடியோ!!
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலில் ஒன்றாக ஒளிபரப்பாகி கொண்டிருப்பது பாக்கியலட்சுமி . ஒரு இல்லத்தரசியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பாக்கியலட்சுமி தொடரில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் தொடர்பு வைத்திருக்கும் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் என்பவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த எபிசோடுகளில் பாக்யலக்ஷ்மிக்கு ராதிகா குறித்த உண்மை தெரியவந்துள்ளது. அதாவது கோபி விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, அவரைப் பார்க்க ராதிகா வந்ததையும், மனைவி என அவர் பணம் கட்டியதையும் கண்டு பாக்கியலட்சுமி பேரதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தன்னை ஏமாற்றிவிட்டு குடும்பத்தினரிடம் நல்லவராக நாடகமாடி கொண்டிருக்கும் கோபியை நினைத்து ஆக்ரோஷமடைந்துள்ளார். இந்த நிலையில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கோபியிடம் பாக்கியலட்சுமி தொடர்ந்து கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மை தெரிந்துவிட்டதோ என கோபி திருதிருவென விழித்துள்ளார். பின் பாக்கியா ராதிகா குறித்த அனைத்து உண்மைகளையும் குடும்பத்தினர் முன்பு போட்டுடைத்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.