96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அப்படி போடு.. தரமான செக் வைத்த இனியா.! ஆடிப்போய் திருதிருவென முழிக்கும் கோபி.! வைரலாகும் பரபரப்பு ப்ரமோ!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற தொடரில் கோபி தனது மனைவி பாக்கியாவிற்கு துரோகம் செய்து அவரிடம் விவாகரத்து பெற்று தனது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யா வீட்டிற்கு அருகேயே வந்து தங்குகின்றனர். இந்த நிலையில் இனியா தனது அம்மா பாக்யா மற்றும் குடும்பத்தினரிடம் கோபித்துகொண்டு அப்பா கோபியுடனே செல்கிறார். இந்நிலையில் அவரது அப்பாவும் பேத்தி இருக்கும் இடத்தில்தான் நானும் இருப்பேன் எனக்கூறி ராதிகா வீட்டிற்க்கே செல்கிறார்.
அங்கு கோபி, ராதிகா மற்றும் அவரது அப்பாவை சமாளிக்க முடியாமல் திண்டாடிபோயுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ராதிகா இனியாவிற்கு காபி கொடுத்துள்ளார். அதனை குடிக்காமல் அவர் அப்படியே வைத்திருக்க இதுகுறித்து ராதிகா இனியாவிடம் கேட்கிறார். அதற்கு அவர் என்னை சத்தம் போட நீங்க யாரு என்று கேட்கிறார். பின் கோபி வந்ததும், உங்களுக்கு நான் முக்கியமா? அவங்க முக்கியமா? இப்பவே தெரியணும் என கேள்வி எழுப்பியுள்ளார். கோபி திருதிருவென முழிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.